பொதுவாக நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளிப்பது வழக்கம்,சிலர் இரவில் குளிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருப்பர்.
இப்படி காலையில் மாலையில் குளிப்பது நமக்கு என்ன நன்மைகளை தருகிறது. எந்த நேரத்தில் குளிப்பது மிகச் சிறந்தது போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்:-
நன்றாக தூங்க வேண்டுமா:-
நிறைய பேர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். மாலையில் குளிப்பதால் இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரும்.
“தூக்க கண்ணோட்டத்தின் வகையில் பார்த்தால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது நல்லது. இது உடலுக்கு ஒரு வித புந்துணர்வை கொடுக்கிறது என்று சந்தேகம் இல்லை” என்று பில் ஃபிஷ் என்ற தூக்க விஞ்ஞான பயிற்சியாளர் டக்.காம் என்ற இணையதளத்தில் கூறுகிறார்.
இரவு குளியல் நல்லது:-
இந்த ஆராய்ச்சி படி பார்த்தால் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடல் வெப்ப நிலையை ஓரளவு சீராக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும். எனவே தூங்குவதற்கு ஒரு 30 நிமிடங்கள் முன்னாடி வெதுவெதுப்பான நீரில் சின்ன குளியல் போட்டு செல்லலாம்.
“இன்ஸோமினியா போன்ற தொந்தரவு உடையவர்கள் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி குளிக்க செல்லலாம். இது என் உடல் வெப்பநிலையை சீராக்கி நல்ல உறக்கத்தை தருகிறது என்கிறார்.
காலை குளியல்:-
காலையில் எழுந்ததும் குளிப்பதும் மிகவும் நல்லது. காரணம் நீர் நமது உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களை தெரிவிக்கிறார்.
தீர்வு: உங்கள் தூக்க பிரச்சினைக்கு இரவு நேர குளியல் என்பது மிகச் சிறந்தது. காலையில் சுறுசுறுப்பாக செயல்பட நீங்கள் காலை குளியலையும் எடுத்து கொள்ளலாம்.
Discussion about this post