கூட்டணி தர்மத்தின் காரணமாக அமைச்சர்கள் கருத்து குறித்து பேச விரும்பவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தீவிரவாதிகள் கூடாரமாகிவிட்டது என்ற பொன்.ராதாவின் கருத்துக்குப் பதிலளித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நன்றாக இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தெரியவில்லை. அவருடைய கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் ஒரு திட்டத்தைக் கூட தமிழகத்திற்கு கொண்டுவரவில்லை. பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் இவ்வாறு பேசி வருகிறார்’ என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு கதிலளிக்கும் வகையில் பேசிய போன் ராதாகிருஷ்ணன், “அமைச்சர் ஜெயக்குமாரும் என்னைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார். அவர்கள் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை. யாருடைய சர்டிபிகேட்டிற்காகவும் நான் காத்திருக்கவில்லை. தமிழகத்திற்காக நான் என்ன செய்தேன் என்று ஜெயலலிதா இரண்டு மேடைகளில் கூறியுள்ளார். யாருடைய பாராட்டுக்காகவும் நான் செயல்பட்டதுமில்லை, செயல்படப்போவதும் இல்லை. கூட்டணி தர்மம் காரணமாக நான் மவுனமாக இருக்கிறேன். முதல்வர், துணை முதல்வர் மீது நாங்கள் நல்ல மரியாதை வைத்துள்ளோம். எந்த இடத்திலாவது தவறாகப் பேசுகிறோமா? அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்திக்கும்போது சில விஷயங்களை பேசுவேன்” என்று குறிப்பிட்டார்.
Discussion about this post