தமிழில் முன்னணி கதாநாயகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா. தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்டமான உருவான பாகுபலி படத்தில் சிறப்பான முறையில் நடித்து தனது முழு திறனையும் தமன்னா வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது, சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிற நிலையில், அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தமன்னா, நடிப்பை மட்டும் வைத்து ரசிகர்களை நமது பக்கம் இழுக்க முடியாது என்றும் எனவே தான் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன் எனவும் கூறினார்.
நடனம் மூலமாக ரசிகர்களை எனது பக்கம் இழுத்தேன் என்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாலும் மறுப்பது இல்லை எனவும் தமன்னா தெரிவித்தார்.
Discussion about this post