ஆரஞ்சு பழத்தோல் உடலிலுள்ள LDL அல்லது ‘மோசமான’ கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.
எனவே உணவில் ஆரஞ்சு பழத்தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.
ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.
100 கிராம் ஆரஞ்சுப் பழத்தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.
எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.
ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.
மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
Discussion about this post