அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகை கீரையினை சாப்பிடுவது அவசியம்.
கீழே 15 வகை கீரைகளும், அதன் பயன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
அகத்திக்கீரை– ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
சிறுபசலைக்கீரை– சருமநோய்களைத் தீர்க்கும், பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை– தசைகளை பலமடையச் செய்யும்.
குப்பைகீரை– பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை– ஆண்மையை பெருக்கும்.
பொன்னாங்கன்னி கீரை– உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை– மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை– கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புதினாக்கீரை– ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
புளிச்சகீரை– கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணத்தக்காளி கீரை– வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
வெந்தயக்கீரை– மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை– ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
முளைக்கீரை– பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
Discussion about this post