கொடூரக் கொலைகளும், நெஞ்சை பிசையவைக்கும் கற்பழிப்புகளும், சிறுமிகள் என்று பார்க்காமல் சீரழிக்கும் கும்பல் நாளுக்கு நாள் தங்களது வக்கிரங்கரை காட்டி வருகிறது. அப்படி நெஞ்சை பிசையவைக்கும் ஒரு சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.
8 வயது குழந்தையை வாயில் பஞ்சை வைத்து.. மொத்தம் 6 பேர் மாறி மாறி சீரழித்து நடுக்காட்டில் வீசிவிட்டு சென்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள கிராமம் கொங்கலாபுரம் பகுதியில் வசித்து வரும் கட்டிடக் தொழிலாளி சுந்தரத்தின் 8 வயது மகள் பிரித்திகா, அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
பள்ளி முடிந்ததும், பிரித்திகா அப்பா வேலை செய்யும் இடத்துக்கு சென்று விடுவாள். அதன்பிறகு சுந்தரம் மகளை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து விடுவார். அப்படித்தான், கடந்த 3 நாளைக்கு முன்பு குழந்தை ஸ்கூல் முடிந்து வருவாள் என்று தந்தை வெகுநேரமாக காத்து கொண்டே இருந்தார். ஆனால் பிரித்திகா வரவே இல்லை அதனால் பயந்துபோன சுந்தரம் மகளை பல இடங்களில் தேடினார். எங்குமே பிரித்திகா கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்யவும், அவர்களும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர்.. அது காணாமல் போன பிரித்திகா தான் என்பது தெரியவந்துள்ளது. உடம்பெல்லாம் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். வாயில் பஞ்சை வைத்து அடைத்துள்ள மாறி மாறி சீரழித்த குரூர்கள், கொடூரமாக கொன்று நடுக்காட்டில் வீசிவிட்டு போயிருந்தனர். இந்த சம்பவம் விருதுநகரையே நிலைகுலைய வைத்தது.
போலீசாரும் 5 தனிப்படை அமைத்து தேடியதில் அந்த பகுதியில் வட மாநில இளைஞர்கள் நிறைய பேர் தங்கி, பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதால், போலீசாருக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரித்ததில் முக்கியமான குற்றவாளி சிக்கினார்.. 20 . அசாம் மாநிலத்தை சேர்ந்த வயது இளைஞர் மஜம் அலி, மாவட்ட எஸ்பியே நேரடியாக இதில் இறங்கி மஜம் அலியிடம் விசாரித்து வருகிறார், இதில் மேலும் 5 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிகிறது. அதனால் அவர்களையும் பிடித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post