அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து கடந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. நட்சத்திரப்பட்டாளங்களோடு அதிக பட்ஜெட்டில் வெளியான ரஜினியின் பேட்ட படத்தை அடித்து துவம்சம் செய்து வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்தப் படம் சன் டிவியில் கடந்த 18 ஆம் தேதி ஒளிப்பரப்பானது. இதையடுத்து #TRPHunterVISWASAMOnSunTv என்ற ஹாஷ்டேக்கையும் #விஸ்வாசம் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி அஜித் ரசிகர்கள் அப்போது டிரெண்டாக்கி னர். பொங்கல் முடிந்து கடந்த 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீண்டும் விஸ்வாசம் ஒளிபரப்பப்பட்டது. ‘தமிழ்நாட்டின் பல வீடுகளில் விஸ்வாசம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங் சன் டிவிக்கு கிடைக்கும்’ என்று ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர்.
அதை உண்மையாக்குவது போல டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை டைத்திருக்கிறது. அதோடு பொங்கல் பண்டிகைக்கு கடந்த 15 ஆம் தேதி விஜய் நடித்த பிகில் படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதிக பட்ஜெட்டில் ரிலீஸ் ஆன பிகில் டிவி பிரிமீயரில் பெரிய சாதனையை நிகழ்த்தவில்லை. இதையடுத்து அஜித் ரசிகர்கள் #KINGofTRPThalaAJITH என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
டிவியில் அதிகமானோர்களால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக இருந்த விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை டிஆர்பி ரேட்டிங்கில் அஜித்தின் விஸ்வாசம் முறியடித்துள்ளது.விஸ்வாசம் படம் கடந்த ஆண்டே அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி விஸ்வாசம் டிவியில் போடப்பட்டது. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post