தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்.
அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன்பின்னர் இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளிக்க அவர் அந்த புகாரை சிபிசிஐடிக்கு அனுப்பி வைத்தார்.
அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்ததோடு.
இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வு எழுதிய 99பேரை தகுதிநீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post