சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிட்டு பேசி விழவை கலகலப்பாக்கினார்.
கரகாட்டகாரன் சினிமா கோவை சரளா பாணியில் சென்னை சேத்துபட்டில் நடந்த வானம் கொட்டட்டும் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதிகாசரத்குமார் பேசி உள்ளார்
இயக்குனர் மணிரத்ரனத்தின் படத்தில் பரத நாட்டிய கதாபாத்திரத்தில் நடித்து அவரை அழவைத்ததாக தெரிவித்த ராதிகா, தொடர்ந்து அவரது படங்களில் கதாநாயகியாக நடிக்க கூப்பிட்டதாகவும் , உலக அழகி ஐஸ்வர்யாராய் தன்னை விட 2 இன்ஞ் கம்மியாக இருந்ததால் அவரை கதாநாயகியாக்கி விட்டதாகவும் கூறி கலகலப்பூட்டினார்.
மேடையில் இளைய நாயகர்களை சின்னபுள்ளைங்க என்று பேசிய ராதிகாவிடம், அதான் வயசாகிடுச்சில்ல தாராளமாக சொல்லுன்னு கூறி சரத்குமார் கலகலப்பூட்டினார். ராதிகாவின் நகைச்சுவையால் அரங்கில் அரங்கத்தில் இருந்தவர்கள் வாய் விட்டு சிரித்தனர்.
Discussion about this post