தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு டைட்டில் இதுதான் என ரசிகர்கள் டிவீட்டரில் டேக் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பதும், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’மன்னவன்’ என்று இருக்கலாம் என்று நேற்று செய்திகள் கசிந்தது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் ’மன்னவன்’ என்ற பட போஸ்டரை டிசைன் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினர்.இதனைத் தொடந்து தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ’அண்ணாத்த’ என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ’தலைவர் 168’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Discussion about this post