குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பிரச்சாரம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா; ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணி தான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், திமுக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
இப்போ பாத்தீங்கன்னா, தி.க.வின் நிலைமை தற்போது ஆப்பசைத்த குரங்குபோல இருக்கு. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கு. வழக்குக்கு சென்றால் அவர்கள் தான் உள்ளே செல்வார்கள்.
இந்து கடவுளை இழிவுப்படுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது, நாகரிகம், பண்பாடு குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்கலாமா வீரமணி? அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு, திக மற்றும் வீரமணியை திமுக கழட்டி விடலைன்னா திமுக விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும் என்றார்.
Discussion about this post