ஆளை மயக்கும் இளமையும், சுண்டி இழுக்கும் அழகும், வாட்ட சாட்டமான கவர்ச்சி தோற்றமும் உடைய நடிகை பிராச்சி டெஹ்லான், டெல்லியை சேர்ந்த இவர் விளையாட்டு வீராங்கனை, கூடை பந்துபோட்டியில் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கும் இவர் இயக்குனரின் கன்னிப்பட்டு ஹிந்தியில் இரண்டு படங்களை நடித்தார்.
பிறகு அப்படியே மலையாள சூப்பர்ஸ்டாரான மம்மூட்டி நடித்த படம் மாமாங்கம். மலையாளத்தில் உருவான இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் .
இந்தியில் 2 படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு மாமாங்கம் படம் மூலம் தென்னிந்திய படத்தில் அறிமுகமான பிராச்சி, மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடிக்க பிராச்சிக்கு அழைப்புவிடுத்தார்.
இயக்குனர் மீதிருந்த நம்பிக்கையில் நேரடியாக படப்பிடிப்பு தளத்துக்கே சென்று படத்தின் கதையை கேட்ட பிராச்சி, நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் என்ன பிரச்னை நடந்ததோ திடீரென்று படத்திலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிராச்சி. துரதிருஷ்டவசமாக இப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் இதேபோல் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என அதில் கூறியுள்ளார்.
Discussion about this post