முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுகொண்டிருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.
சென்னையில் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாஃபா பாண்டியராஜன்; மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு இன்னும் அதிக அளவில் நடக்க வேண்டும். இதனை 14ஆவது நிதி ஆணையத்தில் பேசினோம். நிதிப் பகிர்வை 32 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்திருந்தாலும் கூட, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி ஏன் குறைந்துகொண்டே செல்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி 2,000 கோடி குறைந்துவிட்டது பல விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சிறுக சிறுக மத்திய அரசிடம் செல்கிறது என நினைக்கிறேன். இது மாற்றப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.
ஏற்கனவே, கல்வி உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசு என பொதுப் பட்டியலில் இருந்தது மாற்றப்பட்டு, மத்திய பட்டியலுக்கு சென்றுகொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால் முடிவெடுக்கும் அதிகாரங்களை மத்திய அரசே வைத்துக்கொள்வதாகவும், மாநில அரசின் உரிமையை பறித்துக்கொள்வதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post