சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு இதனைதொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை நுழைய விடாமல் தடுக்கும் வகையில், பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றுப் பல்வேறு இந்து கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சபரிமலை, பம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நூறு வருடங்களுக்கு முன்னர் சபரிமலை அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாகவும் அதனால் சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது என்றும் எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால், அவர்கள் கோயிலுக்கு செல்லவில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. எனவே இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post