அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள நடுநிலை பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் இந்தியாவின் ரூமா பைரபகா (24) என்கிற இளம்பெண்.
அவர் 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ செய்து அவருடன் தவறாக நடந்து கொண்டதாக கடந்த ஜனவரி 16 அன்று கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க குடியுரிமை அல்லாத பைரபகா சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமான நோக்கங்களுக்காக ஒரு குழந்தையை கவர்ந்திழுத்தல் உள்ளிட்டவைகளுக்காக அவர் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் மற்றும் ஜாமீன் பத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பைரபகா மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டால் அவர் நாடு கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
Discussion about this post