இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவக்கத்தில் இருந்த தந்தை பெரியார் சிலை சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
இதனால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பெரியார் குறித்து ரஜினி தவறாக பேசிவிட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டிஜிபி திரிபாதி வெளியிட்ட உத்தரவில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post