இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் கிருமி வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்குள் கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையில், மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில், தனியாக ஒரு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து மும்பைக்கு வருவோர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவர்களை இங்கு வைத்து பரிசோதனை செய்யவும், வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவகையில் சீனாவில் இருந்து வந்த 2 பேருக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது அடையாளம் வெளியே சொல்லவில்லை.
Discussion about this post