ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.இதற்கு மாநிலம் முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர சட்டசபையில் 3 தலைநகரங்களை உருவாக்க வகைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மாசோதா ஆந்திர மேலவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அங்கு இந்த மசோதா நிறைவேறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-‘ மக்கள் நலத்திற்காக அரசு கொண்டு வரக்கூடிய சட்ட மசோதா அனைத்தையும் தடுக்க நினைக்கும் மேலவை தேவையா என்பதை அனைவரும் ஆலோசிக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறை உள்ள இந்த மாநிலத்தில் இந்த சட்ட மேலவை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விவாதிக்க பேரவை கூட்டப்பட வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க திங்கட்கிழமை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
Discussion about this post