திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், தம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என கலகலப்பாக பேசியுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் விருந்தினர்களாக திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் நடந்த பொய் பெட்டி நிகழ்ச்சியில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன், பந்தை அவருக்கு போட்டுள்ளேன். இனி அவர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி, திமுக கரை வேட்டியை கையில் கொடுத்து, இதை போட்டுக்கொள்வது போட்டுக்காதது உங்கள் விருப்பம். பந்து இப்போது உங்கள் கோட்டில் உள்ளது என கலகலப்பாக்கினார்.
Discussion about this post