கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ. சந்திரசேகரன் ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார். ரூபஸ்ரீ ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.
ரூபஸ்ரீ வழக்கமாக டூவீலரில் தான் ஸ்கூலுக்கு செல்வார், அப்படித்தான், கடந்த 16-ந் தேதியும் ஸ்கூலில் இருந்து நேராக, பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கு சென்றார். அதற்கு பிறகு சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்திற்கும் சென்றார். அதற்கு பிறகு வீடு திரும்பவே இல்லை. இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில், மஞ்சேஸ்வரம் பீச்சில் ரூபஸ்ரீ நிர்வாணமாக பிணமாக கிடந்தார்.
ரூபஸ்ரீ தலைமுடி அறுக்கப்பட்டு, உடம்பெல்லாம் காயங்கள், நகக்கீறல்கள் என ரூபஸ்ரீயை சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள் என்று தெரிந்தது. பீச் ஓரத்தில் விழுந்த கிடந்த இந்த சடலத்தை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசுதனைக்கு அனுப்பியது.
உடம்பெல்லாம் அழுகி கிடந்தது, பலாத்காரம் செய்து கொன்றார்களா என்று தெரியாமல் போலீசார் விசாரயை ஆரம்பித்தனர். எப்போதும் ரூபஸ்ரீயிடம் 2 செல்போன்கள் இருக்கும்.. அதில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இன்னொரு செல்போனை தொடர்பு கொண்டால் போன் ரிங் போய் கொண்டே இருக்கவும், விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ சடலத்தை மீட்டனர். ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செல்போன் டவர் காட்டவும், இதனை வைத்து கொலையாளியை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
இந்த சமயத்தில்தான் சுபஸ்ரீ பள்ளியில் வேலை பார்க்கும் டிராயிங் மாஸ்டர் வெங்கட்ரமணா மீது சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் சொல்ல, போலீசார் அந்த டிராயிங் மாஸ்டரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் கொலையாளி என்றும் முடிவாகி உள்ளது. சம்பவத்தன்று ரூபஸ்ரீ தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட சென்றுள்ளார். அப்போது ஒரு கால் வந்துள்ளது. அதை எடுத்து பேசியதுமே ரூபஸ்ரீ முகம் மாறிவிட்டது என்று அவரது மகள் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால்தான் செல்போன் சிக்னலை போலீசார் ஆராய்ந்தனர். அதில், கடைசியாக ரூபஸ்ரீ வெங்கட்ரமணாவிடம் பேசியது தெரியவந்தது.
இதையடுத்துதான் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அப்போது வெங்கட்ரமணாவின் கார் டிக்கியில் முடிகள் இருப்பதையும் போலீசார் பார்த்துள்ளனர். அதனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ரூபஸ்ரீயின் தலைமுடி என்பது தெரியவந்துள்ளது. இப்போது, வெங்கட்ரமணாவை கைது செய்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது: “நான் வேலைக்கு அதே வருஷம்தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார். முதலில் நட்ப்பாக பழகினோம். நாங்க ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.
இதனால் நான் ரூபஸ்ரீயை அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்து வந்தேன், சம்பவத்தன்று வீட்டுக்கும் போயிருந்தேன். அப்போதும் எங்களுக்குள் தகராறு வந்தது. அதனால் ரூபஸ்ரீயை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன். அதன்பிறகுதான் காரில் கொண்டு சென்று நிர்வாணமாக்கி கடலில் வீசினேன். ரூபஸ்ரீ உடம்பெல்லாம் காயங்கள், டிரஸ் இன்றி கிடந்த சடலம், தலைமுடியை ஏன் வெட்டினார் என்ற கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம்.
Discussion about this post