பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறினார். இந்த கெத்து யாருக்கு வரும் என்று பிஜேபியில் இணைந்த ஜீவஜோதி கூறியுள்ளார்.
நாகை, வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியைச் சேர்ந்த ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். தனியார் பள்ளி ஆசிரியரான இவருடன், ஜீவஜோதி சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை ராமசாமி, சரவண பவன் ஓட்டலில் பணியாற்றி வந்தார். இதன்மூலம், அதன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி அறிமுகமானார். ஒரு கட்டத்தில், சரவணபவன் அண்ணாச்சியின் கூலிப்படையால், சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார்.
கணவர் இறப்புக்கு பின், தஞ்சைக்கு வந்த ஜீவஜோதி, தன் பள்ளி தோழரை கல்யாணம் செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, டெய்லர் கடை நடத்தி வந்தார். தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில், மெஸ் நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி, இரு மாதங்களுக்கு முன், பிஜேபி மாநில நிர்வாகி வானதி சீனிவாசனை பார்த்து, தன் ஆசையை தெரிவித்தார்.
இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற பிஜேபி புதிய மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், பிஜேபி மாநில செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், ஜீவஜோதி, பிஜேபியில் இணைந்தார்.
பிஜேபியில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவஜோதி ;பிஜேபியில் 3 மாதத்திற்கு முன்பு உறுப்பினராக சேர்ந்து விட்டேன். இப்போது முறைப்படி பொதுச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளேன். அவரது வழிகாட்டுதலின்படி என் கட்சி பணி இருக்கும். அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் போதும் தானே. அதனால் தான் கட்சியில் இணைந்துள்ளேன்.
என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன். அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்று உயிருடன் உங்களுடன் பேசி கொண்டிருப்பதற்கு ஜெயலலிதா தான் காரணம். பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திட்டங்களை படித்தவர்கள், இளைஞர்கள் புரிந்துள்ளனர். அதனால்தான் அவரை ஆதரிக்கிறார்கள். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுப்பதையே வேலையாக செய்கிறார்கள். இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு கருதி நான் பிஜேபியில் இணையவில்லை. எனக்கு எந்த பயமும் கிடையாது.
நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன். பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அவர் கூறினார். இந்த கெத்து யாருக்கு வரும்?. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்திற்கு ஆதரவு பெருகி கொண்டேதான் இருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post