மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் திருமணத்திற்கு பின்பு கண்டிப்பாக உடலுறவில் ஈடுபடுவர்.அதிலும் புதுமண தம்பதிகளுக்கு உடலுறவு குறித்த பல சந்தேகங்கள் இருக்கும்.அதில் பெரும்பாலானோரின் சந்தேகம் வாரத்தில் எத்தனை முறை உடலுறவில் ஈடுபடலாம் என்பது தான்.
இந்த கேள்வி ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் வருகிறது என்று பல மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஏனெனில் அடிக்கடி உறவில் ஈடுபட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்ற வதந்தியை பலரும் நம்புகிறார்கள்.
அப்படி யாரேனும் சொன்னால் அது முற்றிலும் பொய்.தற்போது உள்ள காலங்களில் பல தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் தான் தங்களது காதலை தனது துணையிடம் வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள்.அதனால் தான் காதலை வெளிப்படுத்த அதிகமான முறை உடலுறவில் ஈடுபட நினைக்கிறார்கள்.
இதுகுறித்து முதன்மையாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் காதலை வெளிப்படுத்த உறவில் ஈடுபடுவது என்பது ஒரு வழிதானே தவிர அது மட்டுமே வழியில்லை.
எனவே அதிகமாக உறவில் ஈடுபட்டால்தான் காதல் அதிகரிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
அதேபோல் உடலுறவில் ஈடுபட கணக்கெல்லாம் கிடையாது.உங்களது உடல் மற்றும் உங்கள் துணையின் உடல் எவ்வளவு ஒத்துழைக்கிறதோ அத்தனை முறை நீங்கள் உறவில் ஈடுபடலாம். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
Discussion about this post