பாலிவுட்டின் மூத்த நடிகர் நானா படேகர் மீது இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா செக்ஸ் புகார் தெரிவித்திருந்தார். அப்போது, கடந்த 2008-ஆம் ஆண்டு ஹார்ன் ஒகே பிளீஸ் என்ற இந்தி சூட்டிங் போது, செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார். அதற்கு மறுத்ததால், அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும் தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார்.
இது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான சினிமா மற்றும் டி.வி. நடிகர்கள் சங்கம் , பதிலளிக்க கோரி நானா படேகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைதொடர்ந்து, நானா படேகர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், என் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post