ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ஹிந்தி படம் அந்தாதுன். வசூலை வாரிக்குவித்தது. 3 தேசிய விருதுகளைப் பெற்றது
இப் பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திலிருந்து துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தாதுன் திரைப்படத்தில் தபு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதைப்படி ஒரு மாடர்ன் பணக்கார நடுத்தர வயதுப் பெண் தான் வாழ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்காத கொடூர வில்லியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post