கல்யாணம் ஆன பெண்ணை கடத்தி சென்று.. பம்ப் செட்டுக்குள் அடைத்து வைத்து.. 5 நாட்களும் நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.
படோஹி என்ற மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வரும் மின்னலா என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் கல்யாணம் ஆனது. அதே கிராமத்தை சேர்ந்த விஷால் சரோஜ் என்பவர், 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, உடனே கூட்டி வர சொன்னார்கள் என்று பொய் சொல்லவும், மாமியாரும் தனது மருமகளை அனுப்பி வைத்துள்ளார்.
அப்பாவுக்கு என்ன ஆச்சோ என்று பதறியபடியே சென்ற, அந்த பெண்ணை இளைஞர் கடத்திவிட்டார். ஒரு பம்ப் செட் அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். 5 நாள் அந்த பெண்ணை அடைத்து வைத்து சீரழித்துள்ளார். இதனிடையே, சம்மந்திக்கு உடல்நிலையை விசாரிக்க மாமியார் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போதுதான் மகள் வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.. இதனால் பயந்து போன அவர்கள் போலீசுக்கும் சொல்ல. விசரணை மேற்கொண்ட போலீசார், சரோஜுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பம்ப் செட்டில் வைத்து அந்த பெண்ணை பலவந்தமாக உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவாதது. இதனையடுத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர் சரோஜையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post