ஒரு கருத்து சொன்ன உடனே நாடே அதிருதில்ல, 70 வயதாகியும் இன்னமும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த மாஸ் யாருக்கு வரும் என அதிமுக அமைச்சர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; ரஜினியின் ரசிகர்கள், ரஜினி ஆளுமையாக வளர்ந்து வருகிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்களே என கேள்வியெழுப்பியதற்கு, பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆம் அவர் ஒரு கருத்து சொன்ன உடனே நாடே அதிருதில்ல, 70 வயதாகியும் இன்னமும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் இவரைப் போல ஒரு நடிகனை இந்திய சினிமாவில் பார்க்க முடியுமா என கேள்வியெழுப்பினார். அவரது படங்கள் இன்னமும் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின்றன.
ரஜினிக்கென்று ஒரு மாஸ் இருக்கிறது அதை யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார். இவரது இந்தப்பேச்சு ரஜினி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.
Discussion about this post