சொத்துக் குவிப்பு வழக்கில் சின்னம்மா சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருக்கமாக கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தண்டனைக் காலம் ஒரு வருடம் உள்ளது. இன்னும் ஒருவருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் சசிகலா சிறையில் இருப்பது குறித்து அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சின்னம்மா சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் சிறையில் இருந்து வேகமாக வெளியே வர வேண்டும் . அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சியடைவேன். சின்னம்மா உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் வெளியே வந்தால், கண்டிப்பாக அவரை சென்று வரவேற்பேன் என இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.
Discussion about this post