தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திங்களாக திகழ்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித். இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஆசைப்பட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘வரலாறு’இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ‘நீங்கள் இந்த கதையை என்னிடம் கூறியிருக்கலாமே நான் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பேனே எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்கள் மிகவும் நடிக்க பிடிக்கும்’ என்று கூறியதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்து அது மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post