நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் டி20 போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
பின்பு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர்(58) ராகுல்(58) மற்றும் கோலி(45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 19 ஓவர்களிலேயே வெற்றிபெற்றது.
மேலும், இந்த போட்டியில் இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.இந்த போட்டியில் 200 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்வதன் மூலம் உலக அரங்கில் இதுவரை நான்கு முறை 200க்கும் அதிகமான ரன் சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணி டி20 போட்டியில் அதிக முறை 200 ரன்களை சேஸிங் செய்த அணியாக சாதனை படைத்துள்ளது. அடுத்த இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியா 2 முறை 200க்கும் அதிகமான இலக்கை சேஸிங் செய்துள்ளது.
Discussion about this post