தற்போது தென்ஆப்பிரிக்கா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2ம் நாள் உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது.அது என்னவெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5,00,000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளது.இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சாதனையை படைத்த முதல் அணியாகவும் விளங்குகிறது இங்கிலாந்து.
Discussion about this post