வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வடசென்னை. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் முழுவதும் கொலைகளாகவும் – துரோகங்களாகவும் படம் விரிகிறது. வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் கூட்டாளிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர். கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட இளைஞனான வரும் தனுஷை, அமீர் ஊக்கப்படுத்துகிறார்.
1980 -1990 இடைப்பட்ட காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார். அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். அமீருக்கு உறுதுணையாக களம் இறங்கிறார் தனுஷ். சாலைகள் அகலப்படுத்தும் திட்டம் தடுக்கப்பட்டாதா என்பது தான் மீதிக்கதை. இதனிடையே, சமுத்திரக்கனி, உள்ளிட்டோர், பணத்திற்காக, அமீருக்கு எதிராக களமிறங்கின்றனர்.
Discussion about this post