விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகியது. ரசிகர்களை கவரும் வகையில் அமைந்த இந்த டீசர் வெளியாகியது முதல் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது.
டீசர் வெளியான 5 மணிநேரத்தில் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் 1 மில்லியன் லைக்சுகளையும் அள்ளி உலகளவில் சாதனை படைத்துள்ளது. உலகளவில் குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்சுகளை பெற்ற டீசராக இது அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
Discussion about this post