கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணை, மயக்கி அந்த பெண்ணின் வீட்டிற்க்கே வந்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர், இவர்களின் விவகாரம் வெளியே தெரிந்து, ஊர் மக்களே கண்றாவியான ஜோடியை ரூமுக்குள் வைத்து கதவை இழுத்து பூட்டி விட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜு நிஷா என்ற பெண், இவரது தம்பி முகம்மது ஜக்ரியா. 7 வருட காதலுக்கு பிறகு கல்யாணம் செய்து கொண்டனர். வயது தெரிந்துதான் பெண்ணை மணமுடித்தார் இளைஞர், இவர்களுக்கு குழந்தை இல்லை. லவ் மேரேஜ் என்பதால் சிராஜுநிஷா கோபத்தில் தன் தம்பியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
4 மாதத்துக்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றவர் திரும்பி புலிவலத்துக்கு வரவே இல்லை. தம்பியை காணோம் என்று சிராஜுநிஷா போலீசில் புகார் தந்தார்.. அதேபோல, கணவனை காணோம் என்று காதல் மனைவி புலிவலம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரை மட்டும் பெற்று கொண்ட ராமர் என்ற அந்த பெண்ணின் அழகில் மயங்கி, அந்த பெண்ணை அடைய பிளான் போட்டு, அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு பலமுறை வரவழைத்துள்ளார்.
கடைசியாக செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு மணிக்கணக்கில் பேசி நட்பு ஆகியுள்ளார். நாளுக்கு நாள் இது கள்ளக்காதலாக மாறியது. இப்போது அந்த பெண்ணின் வீட்டுக்கு, ஏட்டு ராமர் அடிக்கடி வீட்டிற்கு வந்து உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ்காரர் அடிக்கடி வந்து போவதை அந்த கிராம மக்கள் அடிக்கடி பார்த்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராத்திரி வந்து அந்த பெண்ணோடு குஜாலாக இருக்க, கிராம மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த ஜோடியை உள்ளே வைத்து வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டினர்.
கதவை பூட்டும் சத்தம் கேட்டதும், உள்ளே ஜோடிக்கு பயத்தில் அலறியது, இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்க சில மணி நேரத்தில் போலீசாரும் வந்துவிட்டனர்..கதவை திறந்து பார்த்தால் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஏட்டு ராமர் இருந்தார், அவரை பொதுமக்களில் சிலர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.. அதை பார்த்தும் ஆத்திரமடைந்த ராமர் கொந்தளித்துவிட்டார்.
பிறகு ராமரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர், அதிகாரிகள் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். ராமர் சம்பந்தமாக வந்த புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டனர். அதுமட்டுமல்ல ராமரை சஸ்பெண்ட் செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதில் கொடுமை என்னன்னா ராமருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளது.
Discussion about this post