தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.இந்த தொடரில் இடம்பெற்றுள்ள ரிஷாப் பண்டிற்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.
முந்தைய தொடர்களின் ரிஷாப் பண்டின் மோசமான செயல்பாடும் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தாலும் ரிஷாப் பண்டிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
தோனிக்கு பின் இந்திய அணிக்கு இவர் தான் கீப்பர் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்துள்ளார் ரிஷாப் பண்ட்.
இந்நிலையில் ரிஷாப் பண்டை மிகவும் புகழ்ந்து பேசும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கிடம் ரசிகர் ஒருவர் ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்துவிட்டார்.இதைப்பற்றி உங்களது கருத்து என்ன என்று கேள்வி கேட்டார்.’
அதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங் கூறியதாவது:- ‘ரிஷாப் பண்ட் அதிக திறமைகளை கொண்ட ஒரு இளம் வீரர்.
அவருடன் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் இணைந்து பணியாற்ற உள்ளதை நான் எதிர்நோக்குகிறேன், மேலும் அவர் விரைவில் இந்திய அணியில் திரும்புவார் என்று நான் நம்புகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post