நடிகை திரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் தன்னுடைய இன்பாக்ஸிலிருந்து வரும் எந்த மெசேஜ்க்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் திரிஷா நடித்து வெளிவந்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.
96 திரைப்படத்தின் வெற்றியின் வெளிச்சமே ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தற்போது பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடய இன்பாக்ஸில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post