அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் மற்றும் சீதை படங்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றில் செருப்பு மாலை போட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் இல்லாத ஒன்றை கூறுவதாக அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் கட்டுரை மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், ரஜினி கூறியது அனைத்தும் உண்மை என்பது குறித்து கட்டுரை மூலமும், வெளியான புகைப்படங்கள் மூலமும் தெரியவந்துள்ளது.
Discussion about this post