13வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வைத்து சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் 13வது ஐபிஎல் தொடர் வரும் 2020ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் புதுமையை புகுத்தும் வண்ணம் பிசிசிஐ தலைவர் கங்குலியும்,
ஐ.பி.எல் நிர்வாக குழுத் தலைவர் பிர்ஜிஸ் பட்டேல் ஆகியோர் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
அதன்படி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அனைத்து அணிகளிலிருந்தும் நட்சத்திர வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு மோதும் கண்காட்சி ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிகள் வடகிழக்கு இந்தியா மற்றும் தென்மேற்கு இந்தியா என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடகிழக்கில் உள்ள டெல்லி,ராஜஸ்தான்,பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளை சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகவும்,மேலும் தென்மேற்கை சேர்ந்த சென்னை,பெங்களூர் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளை சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகவும் இணைந்து விளையாடவுள்ளனர்.
இந்த போட்டிக்கான மைதானம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.மேலும் இந்த போட்டி வரும் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த போட்டி நடைபெறும் பட்சத்தில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி,தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தென்மேற்கு அணிக்காக இணைந்து விளையாடவுள்ளனர்.இது ரசிகர்கள் இடையே மிகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
Discussion about this post