இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 12 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை துவங்குகிறது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் 12 வீரர்களின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி முதல் ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தோனி, ரிசப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post