சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில், தஞ்சாவூர், ஒரத்த நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி ஜி.ஆனந்தி இந்த 17 தங்க பதக்கங்களையும், ரூ.10,000 ரொக்கப் பரிசையும் பெற்றார்.
அப்பா லாரி ஓட்டுநர். மாசம் அதிகப் பட்சமா அப்போ ரூ.5 ஆயிரம் சம்பாதிப் பார். இந்த பணம் எங்களோட வாய்க்கும் வயிற்றுக்குமே பத்தாது. இருந்தாலும் என்னை நல்லா படிக்க வெச்சாங்க. ஆடு, கோழின்னு எங்க வீட்டிலேயே வளர்த்து வந்தோம். எவ்வளவு தான் பத்திரமா பார்த்துக்கிட்டாலும், அவை திடீர் திடீரென நோய் தாக்கி இறந்துடும். அதனால 10 வயசுலேயே கால்நடை மருத்துவராக னும்னு முடிவெடுத்தேன். டென்த் எக்ஸாம்ல 500-க்கு 474 மார்க் எடுத்தேன். அதுக்கப்புறமா ஸ்காலர்ஷிப் கிடைச்சுது. ப்ளஸ் டூவுல 1,158 மார்க் எடுத்தேன். ஆனாலும், என்னோட கால்நடை மருத்துவர் கனவு அப்படியே இருந்துச்சு.
அதன் பிறகு என்னோட 18 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. 20 வயசுல ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவானேன். அதுக்கப்புறமா எங்கே படிக்கறது? அதனால இனி மேல் படிப்புன்னு சொல்லி திரியாதன்னு உறவினர்கள் எல்லோரும் சொன்னாங்க. ஆனாலும், என் கணவர் ரமேஷ் உற்சாகப் படுத்தினார்.
என்னோட கல்யாணத்துக்கு முன்னாடியே கணவரிடம், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவரும் படிக்க வைப்பதாக உறுதியளித் திருந்தார். பெண் குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா கல்லூரிகளுக்கு விண்ணப் பிச்சேன். 2014-ல் அரசு ஒரத்தநாடு கால்நடைக் கல்லூரியில் இடம் கிடைத்தது. என்னோட கணவர் நாமக்கல்லில் உதவி பொறியாளராக வேலைப் பார்த்துக்கிட்டிருந்தார்.
குழந்தையைப் பார்த்துக்கறதுக்காக தஞ்சாவூருக்கே வந்துட்டோம். சுப நிகழ்ச்சிகள், கல்யாணம், காதுகுத்துன்னு போகும் போகுது, சொந்தக்காரங்க கேலி பண்ணுவாங்க.. ஆனாலும், என் கணவர் உறுதியாக இருந்தார். இந்த 17 விருது களையும் கணவருக்கே சமர்பிக்கிறேன். என்னைப் போல எல்லோருமே சாதிக் கலாம். அதனால பெண்கள் எப்பவும் தன்னம்பிக்கையை மட்டும் விடவே விடாதீங்க!’ என்று மிடுக்காக சொல்கிறார் மருத்துவர் ஆனந்தி.
Discussion about this post