முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி திமுக-வில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகள் முடங்கி போய் இருக்கின்றன. இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி மு.க. அழகிரியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இதையொட்டி புதுக்கோட்டை மற்றும் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, “SUN னோட SON க்கே தடையா?” “ஒற்றுமையோடு இருந்து ஒன்றாய் பயணிப்போம்” “ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை… அசிங்கமானது துரோக ஆசை” “எதற்கும் ஆசைப்படாதவரே..” என்ற வாசகங்களுடன் இடம்பெற்றுள்ள போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
Discussion about this post