உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய வீரர் தோனி எந்தவொரு சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார். அடுத்து நடக்க இருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை.
இதனால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசும் போது ‘தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் அணிக்கு திரும்புவதை பற்றி யோசிக்கலாம் இல்லையேல் அவர் அனைவருக்கு நன்றி என்று கூறவேண்டியது தான் என்று கூறினார்.
இந்நிலையில் தோனி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-‘தோனி வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வருவார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சிகளை தொடங்குவார்.
இப்போது அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் கிரிக்கெட்டை விட்டு போக வேண்டும் என்று நினைத்தால் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் அவர் சென்றுவிடுவார்.
ஆனால், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அவர் இப்போது ஃபிட்டாக இருக்கிறார்.கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார், இந்திய அணிக்காக விளையாட அவர் தயாராக இருக்கிறார்.
இந்திய அணிக்கு நிச்சயம் இப்போது தோனி தேவைப்படுவார் என நான் நினைக்கிறேன். ஆனால், எதுவாக இருந்தாலும் இது கோலியின் முடிவு, அவரின் கையில்தான் இருக்கிறது. அவர் இதனை எப்படி கொண்டு செல்வார் எனக்கு தெரியவில்லை’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.
Discussion about this post