அதிக அளவிளான உடன்பிறப்புகளை கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வராது என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. உடன்பிறப்புகள், அத்தை, மாமாக்கள் என அதிக எண்ணிக்கையிலான உறவு பட்டாளங்களை கொண்டுள்ள குடும்பத்தாருக்கு புற்றநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் என்ற விகிதம் குறைந்தளவில் தென்பட்டது. மூளை, சிறுநீர்ப்பை, நுரையீரல், வயிறு, மார்பகம், கருப்பைகள், பெருங்குடல் மற்றும் மலக்குடல், கருப்பை வாய் மற்றும் மெலனோமா உள்ளிட்ட புற்றுநோய்களின் ஆபத்துகள் பெரிய குடும்பங்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை பொருத்தமட்டில் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்திவிட போவதில்லை., காரணம் பல முறை கருவுற்றலினால் பல வித புற்றுநோய்களில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தாலும், மார்பக புற்றுநோயால் அவர்கள் பாதிக்க வழியுண்டு. இந்த தகவல்களின் படி பெரிய குடும்பத்தில் வசிக்கும் நபர்கள் புற்றுநோய் தாக்கத்தின் பாதிப்பில் இருந்து விடைப்பெறலாம் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
Discussion about this post