தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் வைத்து இந்த போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும்.
இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Discussion about this post