செல்போன் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் பழமையான செல்போன் நிறுவனம் என்றால் அது மோட்டோரோலா நிறுவனம் தான்.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.
அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இது பிப்ரவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த லீக்காகியுள்ள தகவலின்படி இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டது என்றும்.1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 12 ஜி.பி. ரேம் கொண்டது.இதுதவிர எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post