தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியசம்னின்(95) அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதன் மூலம் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றிபெற செய்தார் ரோஹித் ஷர்மா.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது இந்தியா.
Discussion about this post