விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை சமந்தா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு, பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.
Discussion about this post