’மாற்று அரசியல் தருகிறேன் மக்கழேய்ய்ய்…’ என்றபடி அரசியலுக்கு வந்து தே.மு.தி.க.வை தொடங்கினார் விஜயகாந்த். மக்கள் நம்பியதால், குறுகிய காலத்தில் அவர் அடைந்த உச்சத்தையும், அதே மக்கள் வெறுத்ததால் அதைவிட மிக மிக குறுகிய காலத்தில் அவரது கட்சி அடைந்த மெகா சறுக்கலையும் உலகம் அறியும்.
இந்நிலையில், ‘வாரிசு அரசியல் செய்கிறார் கருணாநிதி. ஏன் அவருக்கு அடுத்து அவர் மகன் ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும்தான் கட்சியில் உயர் பதவிகளுக்கு வர வேண்டுமா? கழகத்துக்காக உழைத்த எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்களே!’ என்று பேசிப் பேசியே கைதட்டு வாங்கினார்.
ஆனால் இன்றோ விஜயகாந்த் கட்சியிலும் அதே வாரிசு அரசியல்தான் நடக்கிறது. அதுவும் வேக வேகமாக. அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கடந்த வாரம் பொது நிகழ்வுக்கு வந்து, அரசியல் பேசி தனது எண்ட்ரியை காட்டினார். இந்நிலையில் நேற்று அக்கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூடி விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை கழக பொருளாளர் ஆக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கவனித்த தி.மு.க. இணையதள விங் ‘அன்னைக்கு எங்களை பேசியது வேற வாய், இது….வாயா விஜயகாந்த்?’ என்றிருக்கின்றனர்.
அவ்வ்வ்…!
Discussion about this post