மிஸ்டர் க்ளீன்! என்று பெயர் பெற்று வைத்திருந்த நமோ ஆட்சிக்கு எதிராக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு வெச்சு செய்கிறார்கள் எதிர்கட்சிகள்.
ஒன்று ரஃபேல் ஒப்பந்தம். மற்றொன்று எரிபொருள் விலையேற்றம். டோனியின் ஸ்கோர் போல் தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல் விலையை போனா போகுதுன்னு சமீபத்தில் கொஞ்சம் குறைத்தனர். ஆனாலும் ‘தாங்கமுடியலை’ என்று புலம்புகிறான் சிவிலியன்.
இந்நிலையில், சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் சார்பில் நட்ந்த ஒரு கருத்துரிமை மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் சீதாராம் யெச்சூரி…”நாடெங்கும் பெட்ரோல் பங்க்களுக்கு போகும் போது அங்கே ஒரு பேனர் இருக்கிறது. அது மோடியின் படம் போட்ட பேனர். அதில் மோடி சிரிக்கிறார். ஆனால் பெட்ரோல் போட வருபவர்களின் முகத்தில், பெட்ரோலின் விலையை பார்த்து சிரிப்பு வருவதில்லை. காரணம், அவர்களின் பர்ஸ் அழுகிறது.” என்றார்.
வேதனையுடன் கைதட்டல்கள் காதை பிளந்தன
Discussion about this post