இந்திய ரயில் பயணங்களில் மிக அழகானது கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.
மிக சமீபத்தில் இந்த ரயில் பயணத்துக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி, ஏழை மக்களின் மலை ரயில் கனவுக்கு கேட் போட்டுவிட்டது ரயில்வே துறை.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட பணத்துக்கு டிக்கெட் எடுத்து ஊட்டிக்கு கிளம்பும் சுற்றுலா பயணிகள், வழியிலேயே மலை ரயில் இஞ்சின் பழுது, பாதையில் மரம் விழுந்திருக்கிறது என்கிற காரணங்களால் இறக்கிவிடப்பட்டு சாலை மார்க்கமாக அனுப்பப்படுகிறார்களாம்.
‘என்னடா இது காஸ்ட்லியானாலும் பரவாயில்லைன்னு பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வந்தா, நம்மளை இப்படி நடக்க விடுறாங்களே!’ என்று காட்டுக்குள்ளே புலம்பியபடி நடக்கின்றனர் பயணிகள்.
ரயில்வே துறையோ ‘மழை நேரங்களில் அப்படித்தான். என்ன செய்ய? பாறை உருள்வது, மண் சரிவு, மரங்கள் விழுவதுன்னு பல பிரச்னைகள் இருக்குது. பயணிகளின் பாதுகாப்பு முக்கியமில்லையா?’ என்கிறார்கள்.
அதுவும் சரிதேம்!
Discussion about this post