19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற காலியிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 41.4 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் மோதவுள்ளன.இந்த போட்டி வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடைபெறவுள்ளது.
Discussion about this post